சார்.. வாழ்த்துக்கள்.! இதனை செய்தால் நாங்களும் குழந்தைகளுக்கு உதவ தயார்.! இயக்குநர் சேரன் கோரிக்கை.!cheran-request-to-mk-stalin


இந்தியாவில் கொரோனா பரவலின் 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பினால் நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டும், 100க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தும் வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் பல குழந்தைகள் பெற்றோரை இழந்து தவிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்தநிலையில் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம் வைப்புத்தொகையாக வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மேலும், அவர்களின் பட்டப்படிப்பு வரையில் கல்வி - விடுதிச் செலவை அரசே ஏற்கும். பாதுகாவலர் அரவணைப்பில் இருந்தால் மாதம் ரூ.3000 உதவித்தொகை வழங்கப்படும். ஒரு குழந்தையையும் தமிழக அரசு கைவிடாது என மு.க ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்தநிலையில் முதலவர் ஸ்டாலினுக்கு இயக்குநர் சேரன் பாராட்டு தெரிவித்து கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். 

இது தொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில், "முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.. கொரோனா பாதிப்பில் ஆதரவற்ற குழந்தைகளின் வாழ்க்கை பற்றிய நிறைய கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி கண்டுள்ளீர்கள்.. செயல்படுத்தும் முறை பற்றிய ஆணைப்படிவம் வெளியிட்டால் எங்களால் அப்படிப்ப்பட்ட குழந்தைகளுக்கு வழிகாட்டி உதவ முடியும். நன்றி சார்." என தெரிவித்துள்ளார்.