புலியை கல்லால் தாக்கிய சென்னை இளைஞர்கள்! வனத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை! - TamilSpark
TamilSpark Logo
தமிழகம்

புலியை கல்லால் தாக்கிய சென்னை இளைஞர்கள்! வனத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை!


சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவை சுற்றி பார்த்தபோது, வெள்ளை புலிகள் மீது கற்கள் வீசிய 6 இளைஞர்களுக்கு அபராதம் விதித்து, வனத்துறை அதிகாரிகள் எச்சரித்து அனுப்பி வைத்தனர். 

சென்னையை அடுத்த, வண்டலூரில் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. வண்டலூர் பூங்காவில் சிங்கம், புலி, கரடி, யானை, மான்கள் உள்ளிட்ட பல அரிய வகையான விலங்குகளும், பறவைகளும் ஏராளமாக உள்ளன. இதனை காண தினமும்,  ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர். 

இந்தநிலையில் நேற்றைய தினம் வெள்ளை புலியை, இளைஞர்கள் சிலர் கல்லால் தாக்கி காயம் ஏற்படுத்தியதாக பார்வையாளர்கள் பூங்கா நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். இதுகுறித்து தகவலறிந்த வனத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து 6 இளைஞர்களையும் சுற்றி வளைத்து பிடித்தனர். பிடிபட்ட 6  இளைஞர்களிடமும் தலா 500 அபராதம் வசூலித்தனர். பின்னர், அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

விஜயன், பிரசாந்த், சந்தோஷ், அருள், சூர்யா, சரத் ஆகிய 6 இளைஞர்களிடம் வசூலித்த அபராத தொகையினை விலங்குகளின் பராமரிப்பு செலவுக்காக வழங்கப்பட்டன.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo