18 மாவட்டங்களில் இடியுடன் அடித்துநொறுக்கப்போகும் கனமழை - எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்.!

18 மாவட்டங்களில் இடியுடன் அடித்துநொறுக்கப்போகும் கனமழை - எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்.!


CHennai Weather REport Update

டெல்டா மாவட்டங்கள் உட்பட 18 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "28 ஆம் தேதியான இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யலாம். காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

chennai

29 & 30 ஆம் தேதியை பொறுத்தவரையில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, அரியலூர், பெரம்பலூர், திருநெல்வேலி, தென்காசி, சிவகங்கை, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், தர்மபுரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

மீனவர்களுக்கான எச்சரிக்கையாக இன்று குமரிக்கடல், மன்னார்வளைகுடா, தென்தமிழக கடலோர பகுதி, இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல், இலட்சத்தீவுகள், மாலத்தீவுகள் பகுதியில் பலத்த சூறாவளி காற்று மணிக்கு 40 கி.மீ வேகம் முதல் 50 கி.மீ வேகம் வரை வீசக்கூடும் என்பதால் இப்பகுதிக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.