தமிழகம்

திருமணமாகி ஏழு ஆண்டுகளாக குழந்தை இல்லை! குழந்தை வரம் வேண்டி சாமியாரை நாடிய பெண்ணுக்கு நிகழ்ந்த சோகம்.

Summary:

Chennai vidhya

சென்னை தியாகராய நகரை சேர்ந்தவர் செல்வி. இவரது மகளான வித்யாவுக்கு திருமணமாகி 7 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்துள்ளது. இதனால் மனவேதனையில் இருந்த வித்யாவின் தாயிடம் அவரது உறவினரான மாலதி என்பவர் ஒரு சாமியாரை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

உடனே தாயும் மகளும் அந்த சாமியாரை சென்று பார்த்துள்ளனர். அப்போது அந்த சாமியார் வித்யாவுக்கு செய்வினை இருப்பதாக கூறியுள்ளார். அதனை நீக்கினால் குழந்தை பிறக்கும் என கூறியுள்ளார்.

மேலும் அதற்கு ₹1 லட்சம் செலவு ஆகும். எனவே பணத்தை ரெடி செய்து கொண்டு வாருங்கள் என கூறியுள்ளார். அவர்களும் பணத்துடன் நேற்று முன்தினம் மாலை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு வித்யாவும் அவரது அம்மாவும் வந்துள்ளனர்.

அப்போது அங்கு வந்த சாமியார் பணத்தை பெற்று கொண்டு பூஜை பொருட்கள் வாங்கி வருவதாக கூறி வெளியே சென்றுள்ளார். ஆனால் வெகு நேரம் ஆகியும் சாமியார் வராததால் சந்தேகமடைந்த வித்யா போலீசில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் மருத்துவமனையில் உள்ள கேமராவின் மூலம் அந்த போலி சாமியாரைத் தேடி வருகின்றனர்.


Advertisement