தமிழகம்

வீடு புகுந்து மற்றொருவருக்கு நிச்சியமான இளம்பெண்ணுக்கு தாலிகட்ட முயற்சி.. இளைஞன், திருநங்கை பரபரப்பு செயல்.!

Summary:

வீடு புகுந்து மற்றொருவருக்கு நிச்சியமான இளம்பெண்ணுக்கு தாலிகட்ட முயற்சி.. இளைஞன், திருநங்கை பரபரப்பு செயல்.!

நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணுக்கு வீடு புகுந்து தாலிகட்ட முயற்சித்த இளைஞர் மற்றும் அவரின் சகோதரரான திருநங்கை ஆகியோர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

சென்னையில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டை, அம்பேத்கார் நகர் பகுதியில் வசித்து வருபவர் அருண் (வயது 23). இவரின் சகோதரர் இனியா (வயது 28). இவர் திருநங்கை ஆவார். இவர்களின் வீட்டருகே 23 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இந்நிலையில், அருண் தனது சகோதரருடன் சேர்ந்து இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்று, திருமணம் தொடர்பாக வற்புறுத்தி இருக்கிறார். 

அந்த 23 வயது இளம்பெண்ணுக்கு, ஏற்கனவே உறவுக்கார வாலிபருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. இவர்களின் திருமணம் 10 ஆம் தேதி நடைபெறும் என தேதியும் பெரியோர்களால் குறிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அறிந்து இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்ற அருண், அவருக்கு ஒருகட்டத்தில் கட்டாய தாலி கட்ட முயற்சி செய்துள்ளார். சம்பவத்தின் போது பெண் வீட்டில் ஆட்கள் இல்லை.

இதனால் பேரதிர்ச்சியடைந்த இளம்பெண் கூச்சலிட்டவாறு வெளியே ஓடிவர, அருண் மற்றும் அவரின் சகோதரர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். அக்கம் பக்கத்தினர் பெண்ணின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கவே, வீட்டிற்கு வந்த பெற்றோர் விஷயத்தை கேட்டு, வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

புகாரை ஏற்ற காவல் திருஆயினர் விசாரணையை தொடங்க, பெண்ணின் குடும்பத்தினர் காவல் நிலையத்திற்கு சென்ற தகவல் அருணுக்கு தெரியவந்துள்ளது. இதனால் விசாரணைக்கு பயந்து அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்ய முயற்சித்து இருக்கிறார். அவரை மீட்ட அதிகாரிகள் சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர். 

மேலும், இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், இளம்பெண்ணுக்கு வீடு புகுந்து தாலி கட்ட முயற்சித்த திருநங்கை இனியாவை கைது செய்தனர். அருண் சிகிச்சைக்கு பின்னர் கைது செய்யப்படுவார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement