BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
17 வயது சிறுமி 7 மாத கர்ப்பம்; கரு கலைந்ததால் உயிர் ஊசல்.. வண்டலூரில் சோகம்.! பெற்றோர் கண்ணீர்.!
சென்னையில் உள்ள வண்டலூர், ஓட்டேரி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு திடீர் இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, சிறுமியை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, சிறுமி கர்ப்பமாக இருப்பது உறுதியானது.
சிறுமி 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில், அவரின் கரு கலைந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டு, வயிற்றில் இருந்த குழந்தை இறந்த நிலையில் அகற்றப்பட்டது.
தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில், சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணம் என்ன? என கூடுவாஞ்சேரி மகளிர் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.