தமிழகம்

கத்தியுடன் சென்னை புறநகர் இரயிலில் மர்ம ஆசாமிகள் டிப்-டாப் உடையுடன் பயணம்.. பகீர் சம்பவம்.!

Summary:

கத்தியுடன் சென்னை புறநகர் இரயிலில் மர்ம ஆசாமிகள் டிப்-டாப் உடையுடன் பயணம்.. பகீர் சம்பவம்.!

தலைநகர் சென்னையில், புறநகர் மின்சார இரயில் சேவை பெரிதும் உதவி செய்கிறது. இதனால் இலட்சக்கணக்கான மக்கள் தினமும் பயன்பெற்று வருகின்றனர். சென்னை புறநகர் மின்சார இரயில் சேவையானது அதிகாலை 03.55 மணிமுதல் நள்ளிரவு 1 மணிவரை இயக்கப்படுகிறது. சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, தாம்பரம் இடையேயான கடைசி இரயில் 11.59 மணியுடன் தனது சேவையை முடித்து கொள்கிறது. 

இரவு நேர இரயிலில் கூட்டம் குறைவாக இருந்தாலும், பணியை முடித்துவிட்டு வரும் மக்கள் அதனை பிரதானமாக நம்பி இருக்கின்றனர். இதில், இரயில்வே காவல் துறையினர் பாதுகாப்பு குறைவாக இருப்பதால், சமூக விரோத கும்பல் அதனை தனக்கு சாதகமாக்கி திருட்டு செயல்களில் ஈடுபட்டு வருகிறது. கடந்த சில மாதங்கள் வரை நடைபெற்ற குற்ற செயல்களை கருத்தில் கொண்டு, பெண்கள் பெட்டியில் காவல்துறை பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அனைத்து இரயில் நிலையத்திலும் இரயில்வே பாதுகாப்பு படையினர் பணியில் போடப்பட்டுள்ள நிலையில், சமயம் பார்த்து காத்திருக்கும் சமூக விரோதிகளும் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முந்தினம் இரவு 11.40 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு புறப்பட்ட இரயிலில் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருந்துள்ளது. 7 ஆவது இரயில் பெட்டியில் ஏறிய டிப்டாப் ஆசாமி, பயணிகளை நோட்டமிட்டவாறு இருந்துள்ளார்.

அவர் கதவின் அருகே சென்றபோது இடுப்பு பகுதியில் கத்தி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. கத்தியின் கைப்பிடியை கவனித்த பயணி தனது செல்போனில் புகைப்படம் எடுத்து வைத்து, அடுத்து வந்த இரயில் நிலையத்தில் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். பரங்கிமலை இரயில் நிலையத்தில் சுதாரித்துக்கொண்ட ஆசாமி, காவல் துறை அதிகாரியை கண்டதும் தப்பி சென்றுள்ளான்.


Advertisement