
chennai-to-selam-8-way-road-project-stop
சேலம் - சென்னை இடையிலான எட்டு வழிச்சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது. இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த திட்டதிற்காக நிலங்கள் கையகப்படுத்தும் ஆரம்பக்கட்ட நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொண்டபோது, கடும் எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசு சார்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதிகள், திட்டம் குறித்து, அறிக்கையில் முரண்பாடு உள்ளதால், 8 வழிச்சாலை திட்டத்திற்கு ஏன் தடை விதிக்கக் கூடாது என கேள்வி எழுப்பினர்.
இந்த் நிலையில் எட்டு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு சென்னைஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது. 8 வழிச்சாலை திட்டத்தை மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் திட்டத்தை இறுதி செய்யும்வரை நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படாது எனவும் மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
இதையடுத்து, 8 வழிச்சாலை திட்டத்திற்காக மரங்கள் வெட்டப்பட்ட விவகாரத்தில், வனத்துறை அதிகாரி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், சுற்றுச்சூழல் ஒப்புதல் பெற மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்க மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், மறு உத்தரவு வரும் வரை எட்டு வழிச்சாலை பணிகளுக்கு தடை விதித்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
Advertisement
Advertisement