முன்விரோதத்தில் பயங்கரம்.. 21 வயது இளைஞர் அடித்து கொலை செய்து, தண்டவாளத்தில் உடல் வீச்சு.. துண்டான சடலம்.!

முன்விரோதத்தில் பயங்கரம்.. 21 வயது இளைஞர் அடித்து கொலை செய்து, தண்டவாளத்தில் உடல் வீச்சு.. துண்டான சடலம்.!


chennai-thiruvotriyur-21-aged-man-murder-by-stranger-ga

சென்னையில் உள்ள திருவெற்றியூர் கார்கில் நகர், சபிபுல்லா தெருவில் வசித்து வருபவர் சீனிவாசன் (வயது 21). இவர் கட்டிட தொழிலாளியாக இருந்து வருகிறார். மேலும், சீனிவாசனின் மீது சாத்தாங்காடு காவல் நிலையத்தில் 10 க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் சீனிவாசன் தனது வீட்டில் உறங்கிக்கொண்டு இருந்தார். 

அப்போது, அவரின் வீட்டிற்கு வந்த மர்ம கும்பல், வீட்டில் இருந்து அழைத்து சென்றுள்ளது. பின்னர், மீண்டும் சீனிவாசன் வீட்டிற்கு வரவில்லை. இந்நிலையில், நேற்று காலை நேரத்தில் திருவெற்றியூர் சடையன்குப்பம் பாட்டை பகுதியில் உள்ள தண்டவாளத்தில், சீனிவாசனின் உடல் துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக இருந்துள்ளார்.

chennai

இந்த விஷயம் தொடர்பாக கொருக்குப்பேட்டை இரயில்வே காவல் துறையினருக்கு தகவல் கிடைக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் சீனிவாசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சீனிவாசனின் உடல் அருகே இருந்த சிமெண்ட் ஓடு மற்றும் கற்களில் இரத்தக்கறை காணப்பட்டதால், மர்ம நபர்கள் அடித்து கொலை செய்திருப்பது அம்பலமானது. 

மேலும், கொலை செய்யப்பட்ட சீனிவாசனின் உடல் தண்டவாளத்தில் போடப்பட்டு சென்றதால், அவ்வழியே வந்த இரயில் சக்கரத்தில் சிக்கி உடல் துண்டாகி இருப்பதும் உறுதியானது. இதனால் முன்விரோதத்தால் சீனிவாசன் கொலை செய்யப்பட்டது தெரியவரவே, அவரை யார் கொலை செய்தார்கள்? என்ற விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது.