தமிழகம்

"காதல் மனைவி மறுக்கிறாள்" - காதல் கணவர் விபரீத முடிவு..! கரம்பிடித்த 6 மாதத்தில் கைலாயம்..!!

Summary:

காதல் மனைவி மறுக்கிறாள் - காதல் கணவர் விபரீத முடிவு..! கரம்பிடித்த 6 மாதத்தில் கைலாயம்..!!

காதல் திருமணம் செய்துகொண்ட வாலிபர், மனைவி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட வரவில்லை என்று வருந்தி தற்கொலை செய்துகொண்டார்.

சென்னையில் உள்ள திருவெற்றியூர் சிவசக்தி நகர் பகுதியை சார்ந்தவர் ஏசுராஜ் (வயது 29). இவர் கட்டிட தொழிலாளியாக இருந்து வருகிறார். ஏசுராஜ் கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாக கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் பகுதியை சார்ந்த அஸ்வினி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். 

இவர்கள் இருவரும் சமீபத்தில் கன்னியாகுமரிக்கு சென்றுள்ளனர். இதன்பின்னர், ஏசுராஜ் மட்டும் திருவெற்றியூருக்கு திரும்பி வந்த நிலையில், அவர் மட்டும் தனியே திருவெற்றியூரில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட மனைவி மற்றும் மனைவி குடும்பத்தினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

ஆனால், அவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட வர இயலாது என்று தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்துபோன ஏசுராஜ், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள சாத்தாங்காடு காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement