கள்ளகாதலிக்காக கணவன் தலையில் சுத்தியடி.. புருசனிடம் புருடாவிட்ட மனைவி.. இறுதியில் காத்திருந்த பயங்கரம்..! 

கள்ளகாதலிக்காக கணவன் தலையில் சுத்தியடி.. புருசனிடம் புருடாவிட்ட மனைவி.. இறுதியில் காத்திருந்த பயங்கரம்..! 


Chennai Thiruvetriyur Affair Man Murder Attempt Affair Couple Arrested

சென்னையில் உள்ள திருவெற்றியூர், திருச்சினான்குப்பம் பகுதியை சார்ந்தவர் மணிமாறன் (வயது 42). இவர் மீனவராக இருந்து வருகிறார். மணிமாறனின் மனைவி அபிபு நிஷா (வயது 39). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், கருத்து வேறுபாட்டால் அவ்வப்போது சண்டையிட்டு, நிஷா கணவரை பிரிந்து 2 குழந்தையுடன் தாய் வீட்டில் இருக்கிறார். 

மனைவியை குடும்பம் நடத்த பலமுறை அழைத்தும் அவர் கேட்காத நிலையில், நிஷாவிற்கும் - திருவெற்றியூர் யுவராஜுக்கும் (வயது 36) இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது பின்னாளில் கள்ளக்காதலாக மாறி விஷயம் மணிமாறனுக்கு தெரியவரவே, அவர் மனைவியை கண்டித்து இருக்கிறார். 

மேலும், குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அவர்களை என்னிடம் தந்துவிடு என்று கேட்கவே, அதற்கு மறுப்பு தெரிவித்த நிஷா என் விருப்பப்படி வாழுவேன். அதை கேட்க நீ யார்?. குழந்தையை கொடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.  

இந்த விஷயம் யுவராஜுக்கு தெரியவரவே, மதுபோதையில் நண்பர் ராம்குமார் என்பவருடன் மணிமாறனை சென்று சந்தித்து, நிஷா எனது காதலி, அவரை தொந்தரவு செய்யாதே என கள்ளக்காதலன் தகராறு செய்துள்ளான். இதன்போது, வாக்குவாதம் கைகலப்பாக மாறவே, யுவராஜ் சுத்தியலை எடுத்து மணிமாறனின் தலையில் அடித்து தப்பி சென்றுள்ளார். 

படுகாயமடைந்த மணிமாறன் மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்படவே, திருவெற்றியூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து யுவராஜ் (வயது 36), ராம்குமார் (வயது 32), அபிபு நிஷா ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.