தமிழகம் உலகம்

ஃபாரின் பெண்ணுக்கு பேஸ்புக்கில் காதல் தூது.. கம்பி நீட்டிய காதலனால் பெண் செய்த பரபரப்பு காரியம்.!

Summary:

ஃபாரின் பெண்ணுக்கு பேஸ்புக்கில் காதல் தூது.. கம்பி நீட்டிய காதலனால் பெண் செய்த பரபரப்பு காரியம்.!

வெளிநாட்டு பெண்ணை காதலிப்பதாக கூறி ஏமாற்றி, ரூ.10 இலட்சம் பறித்த சென்னையை சார்ந்தவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

மத்திய கிழக்கு நாடான சைப்ரஸ் நாட்டினை சார்ந்த பெண்மணி முகநூல் கணக்கை உபயோகம் செய்து வந்த நிலையில், அவருக்கு சென்னையை சார்ந்த அருண் பிரகாஷ் என்பவரின் நட்பு ஏற்பட்டுள்ளது. 

இருவரும் முதலில் நட்பாக பழகி வந்த நிலையில், அருண் பிரகாஷ் வெளிநாட்டை சார்ந்த பெண்மணியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி இருக்கிறார். இந்த காதலுக்கு சம்மதம் தெரிவித்த பெண்மணியும் - அருண் பிரகாஷும் காதலித்து வந்துள்ளனர். 

இந்நிலையில், அருண் பிரகாஷ் பெண்ணிடம் அவசர தேவை மற்றும் வேலை விஷயம் என பல காரணத்தை கூறி பெண்ணிடம் ரூ.10 இலட்சம் வரை பறித்து இருக்கிறார். பின்னர், திருமணம் செய்துகொள்ளக்கூறி பெண் கூறவே, அவருடன் கொண்ட தொடர்பை அருண் பிரகாஷ் துண்டித்து இருக்கிறார். 

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெண்மணி, இணையவழியில் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளையில் சம்பந்தப்பட்ட நபர் திருவான்மியூர் பகுதியை சார்ந்தவர் என்பது உறுதியானது. 

இதனையடுத்து, மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் களமிறங்கி அருண் பிரகாஷை கைது செய்தனர். வெளிநாட்டு பணபரிவர்த்தனைக்கு அவர் உபயோகம் செய்த டெபிட் கார்டுகளையும் அதிகாரிகள் கைப்பற்றினர். வெளிநாட்டு பெண்ணை காதலிப்பதாக கூறி ஏமாற்றி பணம் பறித்த அருண் பிரகாஷ் கம்பி எண்ணும் புறவாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

சமூக வலைத்தளங்களில் பழகும் அறிமுகம் இல்லாத நபர்களின் ஆசைவார்த்தையை யாரும் நம்ப வேண்டாம் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.


Advertisement