கணக்கு பரீட்சை நல்லா எழுதல.. மாணவரின் விபரீத முடிவால் கண்ணீரில் பெற்றோர்கள்.!

கணக்கு பரீட்சை நல்லா எழுதல.. மாணவரின் விபரீத முடிவால் கண்ணீரில் பெற்றோர்கள்.!


Chennai Tambaram Perungalathur School Student Suicide

சென்னையில் உள்ள தாம்பரம் பெருங்களத்தூர், சதானந்தபுரம் பகுதியை சார்ந்தவர் ஆம்ப்ரூஸ் மாட்டின். இவரது மகன் மேத்யூ ஆம்ப்ரூஸ் (வயது 14). இவர் ஆலப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், 10 ஆம் வகுப்பு பயின்று வைத்துள்ளார். 

வெள்ளிக்கிழமை பள்ளி முடித்து வீட்டிற்கு வந்த மேத்யூ, பள்ளியில் நடைபெற்ற தேர்வில் கணக்குப்பாட தேர்வை சரியாக எழுதவில்லை என்று கூறி பெற்றோரிடம் புலம்பியுள்ளார். இதனைக்கேட்ட பெற்றோர், மகனுக்கு ஆறுதல் தெரிவித்து சமாதானம் செய்து வந்துள்ளனர். 

பின்னர், வீட்டின் மாடியில் இருக்கும் அறையில் தேர்வுக்கு படிக்கச் செல்வதாக கூறிய மேத்யூ, நீண்ட நேரம் ஆகியும் கீழே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர், மேலே சென்று பார்க்கையில் கதவு உட்புறமாக தாழிடப்பட்டு இருந்துள்ளது. 

chennai

நீண்ட நேரமாக கதவை தட்டியும் மகன் கதவை திறக்காத காரணத்தால் ஜன்னல் வழியாக பார்க்கையில், மேத்யூ தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. இந்த விஷயம் தொடர்பாக பீர்க்கன்காரனை காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகரிகள், மேத்யூ ஆம்ப்ரூஸின் உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.