#Breaking: ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.23 இலட்சம் இழந்தவர் தற்கொலை; தாம்பரத்தில் நெஞ்சை உலுக்கும் சோகம்.. கண்ணீரில் மனைவி, 2 குழந்தைகள்.!

#Breaking: ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.23 இலட்சம் இழந்தவர் தற்கொலை; தாம்பரத்தில் நெஞ்சை உலுக்கும் சோகம்.. கண்ணீரில் மனைவி, 2 குழந்தைகள்.!



Chennai Tambaram Online Rummy loan Torture Man Suicide

 

மருந்து விற்பனை பிரதிநிதி ஆன்லைன் சூதாட்டத்தால் கடன் வாங்கி இறுதியில் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொண்டார்.

சென்னையில் உள்ள தாம்பரம் மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவை வினோத் குமார் (வயது 36). இவர் மருந்து நிறுவனத்தில் பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கின்றனர். 

இந்த நிலையில், ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாக இருந்த வினோத் குமார், பல கடன் நிறுவன செயலிகளை பயன்படுத்தி கடன் வாங்கி சூதாட்டத்தில் முதலீடு செய்து விளையாடியதாக தெரியவருகிறது. 

chennai

இதனால் அவர் ரூ.23 இலட்சம் பணத்தையும் இழந்துவிட்ட நிலையில், லோன் வழங்கிய நிறுவனங்கள் கடன் தொகையை திருப்பி கேட்டு மிரட்டி வந்துள்ளது. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த மருந்து நிறுவன பிரதிநிதி வினோத் குமார் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளார். 

இதனையடுத்து, வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனால் அவரின் குடும்பமே சோகத்திற்குள்ளாகியுள்ள நிலையில், ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டத்திற்கு தடை விதித்த தமிழக அரசின் நடவடிக்கையை ஆளுநர் அங்கீகரிக்க வேண்டும் என அரசியல் கட்சியினர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.