"திட்டுவதை விட திருத்தவேண்டும் என எண்ணுவோம்" - சசிகளால் சூட்சம பேட்டி?.. திமுகவுக்கு அல்டிமேட் லெவல் அட்வைஸ்.! 

"திட்டுவதை விட திருத்தவேண்டும் என எண்ணுவோம்" - சசிகளால் சூட்சம பேட்டி?.. திமுகவுக்கு அல்டிமேட் லெவல் அட்வைஸ்.! 


Chennai Sasikala Pressmeet

 

திமுக தொலைக்காட்சியில் விளம்பரப்படுத்தினால் அது ஆட்சி கிடையாது. தமிழ்நாடு மக்களுக்கு தேவையானதை செய்ய வேண்டும் என சசிகலா பேசினார்.

சென்னையில் வைத்து செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, "டிசம்பர் 19 ம் தேதி அம்மாவை வீட்டிற்கு அழைத்து செல்ல நாள் பார்த்துக்கொண்டு இருந்தோம். அதற்காக மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பரிசு கொடுக்க அம்மா தேர்வு செய்து, இத்தனை பரிசுகள் வேண்டும் என ஆர்டர் செய்திருந்தார்.

chennai

திமுக ஆட்சிக்கு வந்து 20 மாதங்கள் ஆகின்றன. இன்னும் 4 மாதத்தில் 2 வருடங்கள் நிறைவு பெறுகிறது. பாராளுமன்ற தேர்தலும் விரைவில் நடைபெறவுள்ளது. பாராளுமன்ற தேர்தலின்போது 3 மாதங்கள் மாநில அரசினால் திட்டங்கள் அறிவிக்க இயலாது. அதனால் நான்கரை ஆண்டுகளுக்குள் ஆட்சிப்பொறுப்பில் இருக்கும் அரசு மக்களுக்கானதை செய்ய வேண்டும். 

chennai

திமுக தொலைக்காட்சியில் விளம்பரப்படுத்தினால் அது ஆட்சி கிடையாது. தமிழ்நாடு மக்களுக்கு தேவையானதை செய்ய வேண்டும். அதனை செய்ய தவறினால் மக்கள் இறுதி முடிவு எடுப்பார்கள். ஆண்களின் ஆதிக்கம் அரசியலில் எப்போதும் அதிகம் இருக்கும். அதுபோன்ற சமயத்தில் நான் அம்மாவுடன் இருந்து பணியாற்றியுள்ளேன். வாழ்நாட்களில் மனிதர் படும் கஷ்டங்களை நாங்கள் அடைந்துவிட்டோம். 

chennai

நான் எதிர்க்கட்சியாக இருந்தாலும் திட்டுவது கிடையாது. அறிவுபூர்வமாக கூறுவதையே நான் வாடிக்கையாக வைத்துள்ளேன். நான் அரசியலில் நேரடியாக அமைச்சாராக இல்லை என்றாலும், மக்களுக்கு எவை செய்தால் உபயோகமாக இருக்கும் என பலமுறை அம்மாவுடன் ஆலோசனை செய்துள்ளேன். பல திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்த்துள்ளோம். நாங்கள் திட்டுவதை விட திருத்தவேண்டும் என எண்ணுவோம்" என்று பேசினார்.