அந்த மனசுதான் சார் கடவுள்.. ஐபோன், தங்க செயினை உரிமையர்களிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர்கள்.!



Chennai Sanitary Workers 

 

சென்னையில் உள்ள பெருங்குடி, பொன்னப்பன் கிராஸ் தெருவில் வசித்து வருபவர் சின்னம்மாள். இவர் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார். சமீபத்தில் இவர் தூய்மை பணியை மேற்கொண்டபோது, 1 இலட்சம் மதிப்புள்ள ஐபோனை கண்டறிந்தார்.

ஐபோன் கண்டுபிடிப்பு

இந்த விஷயம் குறித்து தனது மேல் அதிகாரிக்கு சின்னம்மாள் தகவல் தெரிவிக்கவே, அவர் ஐபோன் மொபைல் நம்பர் வாயிலாக, உரிமையாளர் நீலா மணிகண்டனை கண்டறிந்து ஐபோன் ஒப்படைப்பட்டது. 

இதையும் படிங்க: "மின் மீட்டர் சரிபார்க்க வந்திருக்கேன்" - மூதாட்டியின் கவனத்தை திசைதிருப்பி நகைகள் கொள்ளை.!

தங்க செயின் ஒப்படைப்பு

மேலும், இதேபோல ரூ.70 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 8 கிராம் அளவிலான தங்க செயினை குப்பையில் இருந்து இருதயமேரி தூய்மைப்பணியாளர் மீட்டார். தங்க செயின் கேகே நகர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. 

நேர்மையுடன் செயல்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.

இதையும் படிங்க: #Breaking: அடுத்த 3 மணிநேரத்திற்கு 30 மாவட்டங்களில் கனமழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!