அதிர்ச்சி தகவல்#: சென்னையில் ஒரே தெருவை சேர்ந்த 11 பேருக்கு கொரோனா பரவியது எப்படி?chennai-same-street-11-people-corono-positive

சென்னை மயிலாப்பூரை அடுத்த மீனாம்பாள்புரத்தை சேர்ந்த 11 பேருக்கு நேற்று கொரோனா தோற்று உறுதியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் நேற்று மட்டும் 121 பேருக்கு கொரோனா தோற்று உறுதியானது. சென்னையில் நேற்று மட்டும் 103 பேர் பாதிக்கப்பட்டனர். தமிழகத்தில் தற்போது மொத்த பாதிப்பு 2058 ஆக அதிகரித்துள்ளது.

இதில் சென்னை மயிலாப்பூரை அடுத்த மீனாம்பாள்புரத்தை சேர்ந்த 11 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்த 11 பெரும் ஒரே தெருவை சேர்ந்தவர்கள் என்பது மேலும் அதிர்ச்சியான செய்தி.

Coronovirus

இந்த 11 பேருக்கும் எப்படி கொரோனா பரவியது என்பது குறித்து ஆராய்ந்ததில் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தரமணியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார். அந்த பெண்ணிற்கு 3 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதியாகி ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த பெண்ணின் மூலம் தான் தற்போது பாதிக்கப்பட்ட 11 பேருக்கும் பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அவர்களில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் உள்ளனர். தற்போது அந்த பகுதியில் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.