23 மாவட்டங்களில் இரவு 7 மணிவரை வெளுத்து வாங்கப்போகும் மழை; அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.!

23 மாவட்டங்களில் இரவு 7 மணிவரை வெளுத்து வாங்கப்போகும் மழை; அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.!


Chennai RMC Announce Rain Today Night 7 PM

 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது. 

இந்நிலையில், இரவு 7 மணிவரையில் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டை, கடலூர், 

மயிலாடுதுறை, இராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, நாகப்பட்டினம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புகள் உள்ளன என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.