19 வயது காதல் மனைவி கணவரால் கொலை.. சந்தேக வலையில் கணவரின் நண்பர்கள்..! அழுகிய நிலையில் உடல் மீட்பு.. அதிரவைக்கும் சம்பவம்.!!

19 வயது காதல் மனைவி கணவரால் கொலை.. சந்தேக வலையில் கணவரின் நண்பர்கள்..! அழுகிய நிலையில் உடல் மீட்பு.. அதிரவைக்கும் சம்பவம்.!!


chennai-red-hills-girl-murder-case-husband-and-his-2-fr

செங்குன்றத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் காதல் கணவனை நம்பி அருவியில் நீராட சென்று கொலை செய்யப்பட்ட கொடூரம் நடந்துள்ளது. பருவகாதலில் தொடங்கி திருமணத்தில் முடிந்து, 3 மாதத்தில் பெண் உயிரிழந்து 1 மாத அழுகிய பிரேதமாக மீட்கப்பட்ட பெருங்கொடூரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு. 

சென்னையில் உள்ள செங்குன்றம், பாடியநல்லுர் நேதாஜி நகரில் வசித்து வந்தவன் மதன். மெக்கானிக்காக வேலை பார்க்கிறான். இவன் கடந்த 4 மாதங்களுக்கு முன்னதாக தமிழ்செல்வி (வயது 19) என்ற கல்லூரி மாணவியை காதலித்து திருமணம் செய்துகொண்டான். இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் முதலாகவே தமிழ்செல்வி மாயமாகினார். 

இதுகுறித்து வெளியே கூறாமல் இருந்து வந்த மதன், முழுநேர கஞ்சா மற்றும் மதுபோதையில் சுற்றித்திரிந்து வந்துள்ளான். மகளை மாதக்கணக்கில் காணாத செய்தி அறிந்து துடித்துப்போன தமிழ்செல்வியின் தாய், செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மதனிடம் விசாரணை செய்தனர். விசாரணையில், பல பரபரப்பு தகவல் வெளியானது. 

காதல் மனைவியான தமிழ்செல்வியை மதன் ஜூன் 26 ஆ தேதி ஆந்திராவில் உள்ள புத்தூர் கோனே அருவிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு இருவருக்குள்ளும் ஏற்பட்ட தகராறில் தமிழ்செல்வி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு இருக்கிறார் என்பது உறுதியானது. இதனையடுத்து, செங்குன்றம் காவல் துறையினருடன் ஆந்திரப்பிரதேசம் நாராயண வனம் காவல் துறையினரும் தமிழ்செல்வியின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். 

chennai

தமிழ்செல்வியின் உடல் கிடைக்காத நிலையில், அங்குள்ள கண்காணிப்பு கேமிராவை சோதனைசெய்தபோது மனைவி தமிழ்செல்வியை மதன் அருவியில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றது உறுதியானது. இதற்கிடையே, காட்டுப்பகுதிக்குள் துர்நாற்றம் வீச தொடங்கியதால், நிகழ்விடத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, காய்ந்த மரக்கிளை மற்றும் இலையினால் மூடப்பட்டு தமிழ்செல்வியின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. 

அவரின் உடலை மீட்ட அதிகாரிகள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மதனிடம் நடந்த கிடுக்குபிடி விசாரணையில், மதன் மற்றும் அவனின் நண்பர்கள் 2 பேர் சேர்ந்து கொலையை நடத்தியது அம்பலமானது. அதாவது, கடந்த ஜூன் 26 ஆம் தேதியில் தம்பதிகள் கோனே அருவிக்கு செல்வது மதனின் 2 நண்பர்களுக்கு தெரிந்துள்ளது. இருவரும் தனித்தனியே அருவிக்கு சென்றுள்ளனர்.

அருவிக்கு அருகில் இருக்கும் வனப்பகுதியில் மதன், தமிழ்செல்வி மற்றும் மதனின் 2 நண்பர்கள் ஆகியோர் இருந்த நேரத்தில் தகராறு ஏற்பட்டு, மதன் ஆத்திரமடைந்து தமிழ்செல்வியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். அதன்பின், உடல் மீது காய்ந்த மரஇலை, கம்புகள் போன்றவற்றை போட்டுவிட்டு எதுவும் தெரியாதது போல உள்ளூரில் போதையில் உல்லாசமாக திரிந்து வந்துள்ளான். 

chennai

இதனையடுத்து, மதனின் நண்பர்களை கைது செய்த காவல் துஆயினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மதன் - தமிழ்செல்வி தனியாக இருந்தபோது, மதனின் நண்பர்கள் எதற்காக? செல்ல வேண்டும். தமிழ்செல்வி மூவரால் கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா? அல்லது பாலியல் அத்துமீறல் முயற்சியில் கொலை நடந்தா? நண்பர்களுக்கு மனைவியை விருந்தளிக்க நினைத்த கணவனின் செயலுக்கு மனைவி ஒத்துழைக்காததால் கொலை செய்யப்பட்டாரா? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.