சாட்சிசொல்ல திட்டமிட்ட நண்பனை போட்டுத்தள்ளிய நண்பர்கள்.. ரௌடியை வேரறுத்த தோழர்களின் பரபரப்பு செயல்.!chennai-red-hills-friends-killed-another-one

கொலை வழக்கில் ரௌடி நண்பன் அப்ரூவராக மாறவிருந்த செய்தியை அறிந்த நண்பர்கள், மதுபானம் ஊற்றிவிட்டு நண்பனின் கதை முடித்த சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

சென்னையில் உள்ள செங்குன்றம் பாடியநல்லூர் நகரில் வசித்து வருபவர் ரமேஷ் என்ற சுப்பிரமணி (வயது 24). உள்ளூரில் ரவுடியாக வலம்வரும் இவனின் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவனின் நண்பர்கள் அரவிந்த், உருளை வினோத், விஜய், வீரராகவன், வெங்கடேசன். 

இவர்கள் அனைவரும் நேற்று அதிகாலை 3 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் ரமேஷ் வீட்டிற்கு வந்து, உறக்கத்தில் இருந்த ரமேஷை எழுப்பி உள்ளனர். நண்பர்களை கண்டதும் "எதற்காக இந்த நேரத்தில் வந்துள்ளீர்கள்?" என்று கேட்டதற்கு, "வா மது அருந்தலாம்" என்று அழைத்துச் சென்றுள்ளனர். 

இந்த நிலையில், சோழவரம் உபரி கால்வாய் பகுதியில் அனைவரும் மதுபானம் அருந்திய நிலையில், ரமேஷுக்கு போதை ஏறியதும் நண்பர்கள் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். இரத்த வெள்ளத்தில் துடிதுடித்த ரமேஷின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், உயிருக்கு போராடியவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

chennai

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரமேஷ் பரிதாபமாக உயிரிழக்கவே, தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் வீரராகவன் (வயது 25), விஜய் (வயது 25), வெங்கடேசன் (வயது 27), அரவிந்த் (வயது 20), வினோத் (வயது 22) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

முதற்கட்ட விசாரணையில், ரமேஷ் கொலை வழக்கு விஷயத்தில் அப்ரூவராக மாறி நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல திட்டமிட்டு இருந்ததாகவும், இந்த தகவலை அறிந்த நண்பர்கள் ரமேஷை கொலை செய்ததாகவும் கூர்பாடுகிறது. இதுகுறித்த விசாரணை நடந்து வருகிறது.