தமிழகம்

சாலையோரம் நின்ற லாரி மீது, அதிவேக டூ வீலர் மோதி விபத்து.. இளம் அண்ணன் - தம்பி பரிதாப பலி.!

Summary:

சாலையோரம் நின்ற லாரி மீது, அதிவேக டூ வீலர் மோதி விபத்து.. இளம் அண்ணன் - தம்பி பரிதாப பலி.!

சென்னையில் உள்ள செங்குன்றம், அலமாதி எடப்பாளையம் காந்தி தெருவை சேர்ந்தவர் சத்ய நாராயணன். இவரின் மகன்கள் உதய் (வயது 13), சரண் (வயது 11). உதய் எடப்பாளையத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 8 ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். சரண் இதே பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். 

சகோதரர்கள் இருவரும் நேற்று முன்தினம் மாலை நேரத்தில், எடப்பாளையம் பஜாருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருந்துள்ளனர். இருசக்கர வாகனத்தை உதய் இயக்க, பின்னால் சரண் இருந்துள்ளார்.

இவர்கள் இருவர் சென்ற இருசக்கர வாகனம் திருவள்ளூர் செல்லும் நெடுஞ்சாலையில் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரியின் மீது பயங்கரமாக மோதியுள்ளது. இதில், இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த உதய் மற்றும் சரண் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சோழவரம் காவல் துறையினர், அண்ணன் - தம்பியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, தலைமறைவான லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர். விபத்தில் மகன்களை பறிகொடுத்த பெற்றோர் கண்ணீரில் கதறியழுதது காண்போரை பெரும் சோகத்திற்கு உள்ளாக்கியது. 

மேலும், வீட்டில் உள்ள சிறார்களை வாகனம் இயக்க அனுமதிக்க வேண்டாம் என காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.


Advertisement