அண்ணனின் கொலைக்கு 9 ஆண்டுகள் கழித்து பழிக்குப்பழி.. 5 பேர் கும்பலால் நடந்த பயங்கரம்.!

அண்ணனின் கொலைக்கு 9 ஆண்டுகள் கழித்து பழிக்குப்பழி.. 5 பேர் கும்பலால் நடந்த பயங்கரம்.!


CHENNAI PULIANTOPE MAN KILLED REVENGE MURDER

சென்னையில் உள்ள புளியந்தோப்பு காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் சேட்டு என்ற கார்த்திகேயன். இவர் சம்பவத்தன்று காந்திநகர் பொதுகழிப்பிடத்தில் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டு இருந்தார். 

அப்போது, இவரை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்து தப்பிச் சென்றுள்ளது. இந்த விஷயம் தொடர்பான புகாரின் பேரில் வழக்கு பதிந்த காவல்துறையினர் பிரேம்குமார், குரு உட்பட ஐந்து பேரை கைது செய்தனர். 

chennai

இவர்களிடம் நடந்த விசாரணையில், கடந்த 2013 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட ரஞ்சித் என்பவரின் சகோதரர் பிரேம்குமார், தனது கூட்டாளியுடன் சேர்ந்து அண்ணனின் கொலை வழக்கில் தொடர்புடைய கார்த்திகேயனை பழிவாங்கும் எண்ணத்துடன் போட்டுத்தள்ளியது அம்பலமானது.