தாமதமாக பேருந்தை இயக்கியது குறித்து கேள்வி கேட்ட பெண்ணின் மீது தாக்குதல்.. சென்னை எம்.டி.சி ஓட்டுநர் அதிர்ச்சி செயல்.!

தாமதமாக பேருந்தை இயக்கியது குறித்து கேள்வி கேட்ட பெண்ணின் மீது தாக்குதல்.. சென்னை எம்.டி.சி ஓட்டுநர் அதிர்ச்சி செயல்.!


Chennai Perumbakkam Parrys Corner MTC Bus Driver Attacks Woman

ஓட்டுனரிடம் பேருந்து தாமதமாக இயக்கியது குறித்து கேள்வி கேட்ட பெண் தாக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. 

சென்னையில் உள்ள பெரும்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் முருகம்மா. இவர் பாரிமுனை செல்ல, கணவருடன் அதிகாலையில் பேருந்து பணிமனைக்கு சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த 102 P தடம் எண் கொண்ட மாநகர பேருந்து ஓட்டுநர், பேருந்தை இயக்கவில்லை. 

அதிகாலை 5.10 மணிக்கு புறப்பட வேண்டிய பேருந்து, 5.30 க்கு புறப்பட்டது. இதுகுறித்து முருகம்மா பேருந்து ஓட்டுனரிடம் கேள்வி எழுப்பவே, ஆத்திரமடைந்த ஓட்டுநர் பெண் மற்றும் அவரின் கணவர் மீது தாக்குதல் நடத்தினார். 

chennai

இதனால் பாதிக்கப்பட்ட பெண்மணி அங்கேயே மயங்கி விழுந்துவிட, இதுகுறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு மக்கள் கண்டனம் தெரிவிக்க, 60 க்கும் மேற்பட்ட பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

காலை 8 மணி வரையில் பேருந்துகள் இயக்கப்படாத காரணத்தால் மக்கள் அவதிப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி பேருந்துகளை இயக்கவைத்தனர்.