ஏ.டி.எம் சென்றவருக்கு எமனான திடீர் முடிவு.. இரயில் முன் பாய்ந்து பெண் விபரீதம்.. உடல்சிதறி பறிபோன உயிர்.!chennai-peravallur-woman-suicide

சென்னையில் உள்ள பெரவள்ளூரில் வசித்து வருபவர் நாகராஜா. இவரின் மனைவி ஜோதி சுகன்யா (வயது 35). இவர் இன்று காலை நேரத்தில் ஏ.டி.எம்-மில் பணம் எடுத்து வருவதாக குடும்பத்தினரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். 

இந்த நிலையில், பெரம்பூர் இரயில் நிலையம் அருகே சுகன்யா நடந்து சென்றபோது, அவ்வழியே அரக்கோணத்தில் இருந்து சென்னை நோக்கி பயணம் செய்த மின்சார இரயில்முன் பாய்ந்து திடீரென தற்கொலை செய்துகொண்டார். 

chennai

இரயில் மோதியதில் சுகன்யா நிகழ்விடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக பலியாகினார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் பெரம்பூர் இரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் சுகன்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள அதிகாரிகள் ஜோதி சுகன்யாவின் கணவர் நாகராஜனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.