ஹோட்டல் மேனேஜ்மெண்ட் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - பேராசிரியர் மீது பரபரப்பு புகார்..!Chennai Pallikaranai Hotel Management College Professor Sexual Torture to Girl Students

பேராசிரியர் மீது பாலியல் புகார் அளித்துள்ள தனியார் கல்லூரி மாணவர்கள், கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். 

சென்னையை அடுத்த பள்ளிக்கரணை, ஜலட்டியன்பேட்டை பகுதியில் தனியார் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பேராசிரியராக மாடம்பாக்கம் பகுதியைச் சார்ந்த ஆபிரகாம் என்ற 41 வயது நபர் பணியாற்றிவருகிறார். 

கல்லூரியில் பயின்று வரும் மூன்றாம் வருடம் படிக்கும் 2 மாணவிகளுக்கு, பேராசிரியர் ஆபிரகாம் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த விஷயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை தலைவர் மற்றும் கல்லூரி நிர்வாகத்திடம் மாணவிகள் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

tamilnadu

இதனால் கல்லூரி வளாகத்தில் மாணவ - மாணவிகள் திடீர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்து கல்லூரிக்கு விரைந்த பள்ளிக்கரணை காவல் துறையினர், பேராசிரியரின் பாலியல் அத்துமீறல் குறித்து புகார் பதிவு செய்து, கல்லூரி முதல்வர், பேராசிரியர் ஆபிரகாம் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.