வேட்டையன் ரூ.1000 கோடி வசூல்: மண்சோறு சாப்பிட்டு ரஜினி ரசிகர்கள் வழிபாடு.!
துக்க நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியபோது நடந்த சோகம்; இருசக்கர வாகனம் லாரியில் மோதி பரிதாப பலி.!
சென்னையில் உள்ள ஓ.எம்.ஆர் சாலையில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, பாதுகாப்பான முறையில் பணிகள் நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அவ்வப்போது மெட்ரோ பணிகள் நடைபெறும் இடங்களில், அதற்கான பொருட்களை ஏற்றி-இறக்க கனரக வாகனங்கள் வந்து செல்லும். இவை ஒருசில நேரம் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
இந்நிலையில், இன்று ஓ.எம்.ஆர் சாலையில் அவ்வாறாக நிறுத்தி வைக்கப்பட்ட லாரியின் மீது, இருசக்கர வாகனத்தில் வந்த விக்னேஷ் என்ற இளைஞர் மோதி நிகழ்விடத்திலேயே பலியாகினர்.
தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், விக்னேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், இளைஞர் தனது உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு சென்று வரும்போது சோகம் நடந்தது தெரியவந்தது.