வினையான விளையாட்டு; துணி காயப்போடும் கயிறு இறுக்கி 12 வயது சிறுவன் பரிதாப பலி.!Chennai Old Pallavaram Child Died 

 

சென்னையில் உள்ள பழைய பல்லாவரம் பகுதியைச் சார்ந்த சிறுவன் அதிரதன் (வயது 12). சிறுவன் துணி காய வைப்பதற்காக வீட்டில் இருந்த கயிறை கொண்டு விளையாடி இருக்கிறார். 

அப்போது கயிறு எதிர்பாராத விதமாக சிறுவனின் கழுத்தில் இறுக்கி கீழே விழுந்து மயக்கம் அடைந்துள்ளான். சிறுவனை மீட்ட பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். 

chennai

அப்போது சிறுவனை பரிசோதனை செய்து மருத்துவர்கள், சிறுவன் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த காவல் துறைஞர், அதிரதனின் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.