சிலிண்டர் டெலிவரி செய்ய சென்றவருக்கு நொடியில் நேர்ந்த சோகம்.. மாடிப்படியில் பரிதாபம்.!Chennai Nanmangalam Man Died When Went to Gas Delivery at Steps

சென்னையில் உள்ள நன்மங்கலம், பாரத் தெரு பகுதியை சார்ந்தவர் பிரான்சிஸ் (வயது 52). இவர் கியாஸ் ஏஜென்சி நிறுவனத்தில், வீட்டிற்கு சிலிண்டர் டெலிவரி செய்யும் ஊழியராக பணியாற்றி வருகிறார். 

இந்நிலையில், கடந்த 26 ஆம் தேதி பெரும்பாக்கத்தில் உள்ள நேசமணி நகர், மாடி குடியிருப்பில் இருக்கும் வீட்டிற்கு கியாஸ் டெலிவரி கொடுக்க சென்றுள்ளார். அதன்போது, மாடிப்படியில் ஏறுகையில், தோளில் இருந்த சிலிண்டருடன் காலிடறி கீழே விழுந்துள்ளார். 

chennai

தோளில் இருந்த சிலிண்டர் பிரான்சிசின் தலை மற்றும் கழுத்து பகுதியில் விழுந்து படுகாயம் அடைந்துள்ளார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளனர்.  

மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட பிரான்சிஸ், நேற்று மாலை நேரத்தில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து பள்ளிக்கரணை கவலை துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.