தமிழகம்

இல்லாத வீட்டுக்கு கடன் மட்டும் ரூ.42.78 இலட்சம் ஓவா கொடுப்பாராம்.. பஞ்சாப் நேஷனல் வங்கியின் முன்னாள் பொதுமேலாளர் அதிரடி கைது..!

Summary:

இல்லாத வீட்டுக்கு கடன் மட்டும் ரூ.42.78 இலட்சம் ஓவா கொடுப்பாராம்.. பஞ்சாப் நேஷனல் வங்கியின் முன்னாள் பொதுமேலாளர் அதிரடி கைது..!

வங்கி முன்னாள் பொதுமேலாளர் உதவியுடன் கட்டப்படாத வீட்டினை அடமானம் வைத்து ரூ.42.78 லட்சம் மோசடி கடன் பெற்ற விவகாரத்தில், முன்னாள் வங்கி உதவி பொதுமேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். 

பஞ்சாப் நேஷனல் வங்கியின் மேலாளர் மகேந்திரன் என்பவர், சென்னை பெருநகர காவல் ஆனியரிடம் புகார் அளித்தார். இந்த புகாரில், "கோயம்பேடு பகுதியை சேர்ந்த முரளிதரன், அவரின் மனைவி ஜெயந்தி ஆகியோர் திருவான்மியூரில் இரண்டடுக்கு மாடி குடியிருப்பின் தரைத்தளத்தில் குடியிருப்பு கட்ட அனுமதி இல்லாத நிலையில், தரைதள பகுதியில் குடியிருப்பு இருப்பதாக ஆவணத்தை தயாரித்து இருக்கின்றனர். 

இந்த ஆவணங்கள் மூலமாக கடந்த 2017 ஆம் வருடம் பஞ்சாப் நேஷனல் வங்கியின் மயிலாப்பூர் கிளையில், ஸ்ரீனிவாஸ் கன்ஸ்ட்ரக்ஷன் என்ற பெயரில் ரூ.42.78 இலட்சம் கடன் பெற்று மோசடி செய்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். 

இந்த புகாரை ஏற்றுக்கொண்ட காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், முரளிதரன் வங்கியை ஏமாற்றி, தன்னையும் - மனைவியையும் பங்குதாரராக காண்பித்து போலியான நிறுவன பெயரில், மோசடி செய்து வங்கி அதிகாரியின் துணையுடன் ரூ.42.78 இலட்சம் கடன் தொகை பெற்றது உறுதியானது. இதனையடுத்து, முரளிதரன் மற்றும் அவரின் மனைவி ஜெயந்தி கடந்த 2021 டிசம்பர் 28 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.

கட்டப்படாத வீட்டிற்கு கடன் வழங்க உத்தரவிட்டு, மோசடி செயலுக்கு உடந்தையாக இருந்த மயிலாப்பூர் வங்கியின் கிளை உதவி மேலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், கோயம்புத்தூரை சார்ந்த அந்த வங்கி பொது மேலாளர் ரொசாரியோ சில்வர்ஸ்டைன் ஷென் (வயது 57) என்பவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.


Advertisement