தமிழகம் Deepavali News

உயிரை பறித்த தீபாவளி சீட்டு! தாயும், மகனும் தற்கொலை! சென்னையில் ஒரு சோக சம்பவம்!

Summary:

Chennai mother and son hanging themselves because of no money

சென்னை கொரட்டூரைச் சேர்ந்தவர் அமலா ஜான் (60). இவரது மகன் ஜோஷ்வா (29). அமலாவின் கணவர் எழும்பூரில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபட்டால் பிரிந்து வாழ்கின்றனர். மகன் ஜோஷ்வா தாயுடன் வசித்துவந்துள்ளார்.


இந்நிலையில் தாய் அமலா ஜான் மற்றும் மகன் ஜோஷ்வா இருவரும் சேர்ந்து அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள சுமார் 275 பேரிடம் தீபாவளி சீட்டு என்டர் பெயரில் பணம் வசூலித்துள்ளனர். வசூலித்த பணம் அனைத்தையும் ஷேர் மார்க்கெட்டில் போட்டுள்ளார் மகன் ஜோஷ்வா. போட்ட பணம் அத்தனையும் நட்டமானதால் சீட்டு போட்டவர்களுக்கு கொடுக்க பணம் இல்லை.

இந்நிலையில் சீட்டு பணம் போட்டவர்கள் தங்களது பணத்தை திரும்ப கேட்க தொடங்கியுள்ளனர். ஆனால் கொடுக்க பணம் இல்லாததால் என்ன செய்வது என்று தெரியாத தாயும், மகனும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர்.

பின்னர் இருவரும் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இந்நிலையில் பொதுவாக அமலா காலையில் எழுந்து நாய்க்கு சாப்பாடு கொடுத்துவிட்டு அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் பேசிச் செல்வது வழக்கம். ஆனால் இரண்டு நாட்கள் ஆகியும் அமலா மற்றும் ஜோஷ்வா இருவரும் வீட்டைவிட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் உள்ளே பார்த்தபோது இருவரும் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் அமலா எழுதிய கடிதம் ஒன்றை கைப்பற்றினர்.

அந்த கடிதத்தில், சீட்டுக் கம்பெனியில் வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்க முடியாது என்பதால் தற்கொலை செய்து கொள்கிறோம். எங்களிடம் பணம் கட்டியவர்கள் மன்னித்து விடுங்கள். எங்களது நாயை கவனிக்க யாரும் இல்லை என்பதால் நாய்க்கும் விஷம் கொடுத்துவிட்டோம் என்று தற்கொலை கடிதத்தில் எழுதியுள்ளனர். தாய் மற்றும் மகன் இருவரும் தற்கொலை செய்துகொண்டது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement