டிப் டாப் உடை.. டீசண்டான வேலை.. ஆனால் செஞ்ச காரியம் இருக்கே.. இளம் பெண் கொடுத்த பரபரப்பு புகார்..

டிப் டாப் உடை.. டீசண்டான வேலை.. ஆனால் செஞ்ச காரியம் இருக்கே.. இளம் பெண் கொடுத்த பரபரப்பு புகார்..


Chennai man cheated young girl in the name of world bank

உலக வங்கியில் வேலை வாங்கி தருவதாக கூறி, இளம் பெண்ணிடம் அநாகரீக கேள்விகள் கேட்டு, மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை தரமணி அசென்டாஸ் சாலையில் அமைந்துள்ளது உலகவங்கியின் கிளை ஒன்று. இந்த வங்கியின் சிறப்பு பாதுகாப்பு அதிகாரியாக வேலை பார்த்துவரும் சரத் சந்தர் என்பவர் சமீபத்தில் தரமணி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அந்த புகாரில், உலக வங்கியில் வேலை வாங்கி தருவதாக கூறி, சிலர் போலியாக நேர்காணல் நடத்துவதாக இளம் பெண் ஒருவர் தங்களுக்கு ஈமெயில் புகார் கொடுத்திருப்பதாகவும், இதுபோன்று மோசடியில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர் தனது புகாரில் தெரிவித்திருந்தார்.

இதனை அடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார், ஈமெயில் மூலம் புகார் கொடுத்த பெண்ணை கண்டுபிடித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அந்த பெண், உலக வங்கியில் தான் வேலைக்கு விண்ணப்பிருந்ததாகவும், ஆனால் தனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது எனவும், ஆனால் எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட சில நாட்களில் அதே வங்கியில் இருந்து நேர்காணலுக்கு அழைப்பு வந்தது.

நேர்காணலுக்கு வரகூரிய முகவரிக்கு தான் சென்றதாகவும், அங்கு சென்றபோது வங்கி தொடர்பான கேள்விகள் கேட்காமல் உடை, உருவம் பற்றி அநாகரீகமாக கேள்வி கேட்டனர். இதனால் ஏற்பட்ட சந்தேகத்தில்தான் தான் புகார் செய்ததாக அந்த பெண் கூறினார்.

இதனை அடுத்து ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த அந்தோணி (39) என்பவரை போலீசார் கைது செய்தனர். குறிப்பிட்ட நபர் அதே உலக வாங்கி அமைந்துள்ள இடத்துக்கு அருகில் இருக்கும் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும், பலரிடம் தான் உலக வங்கியில் வேலை செய்வதாகவும், அதே வங்கியில் வேலை வாங்கி தருவதாகவும் கூறி மோசடி செய்துவந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அந்தோணியை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.