தமிழகம்

காதலில் விழுந்த சிறுமியை சீரழித்த காதலன்.. மருத்துவமனையில் அதிர்ச்சி ரிப்போர்ட்.. கண்ணீரில் பெற்றோர்கள்.!

Summary:

காதலில் விழுந்த சிறுமியை சீரழித்த காதலன்.. மருத்துவமனையில் அதிர்ச்சி ரிப்போர்ட்.. கண்ணீரில் பெற்றோர்கள்.!

16 வயது சிறுமியிடம் திருமண ஆசைவார்த்தை கூறி, பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய இளைஞர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 

சென்னையில் உள்ள மாதவரம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி, உடல்நலம் சரியில்லாமல் இருந்துள்ளார். சிறுமியின் பெற்றோர் மகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், சிறுமி 3 மாத கர்ப்பிணியாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரணை செய்ததில் அவர் காதல் பெயரால் ஏமாற்றப்பட்டது உறுதியாகவே, மாதவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்துகையில், பார்த்தீபன் (வயது 20) என்ற இளைஞர் சிறுமியிடம் காதலிப்பதாக கூறி, திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது அம்பலமானது. 

இதனால் சிறுமி கர்ப்பம் தரிக்கவே, அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதியானதும் உண்மை தெரியவந்துள்ளது. சிறுமியின் வாக்குமூலத்தின் பேரில் புழலை சேர்ந்த பார்த்தீபனை கைது செய்த காவல் துறையினர், சிறையில் அடைத்தனர்.


Advertisement