தமிழகம்

பாம்பு கடித்து 6 வயது சிறுமி பரிதாப பலி.. வீட்டின்முன் விளையாடியபோது நடந்த பயங்கரம்.!

Summary:

பாம்பு கடித்து 6 வயது சிறுமி பரிதாப பலி.. வீட்டின்முன் விளையாடியபோது நடந்த பயங்கரம்.!

வீட்டின் முன்புறம் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை பாம்பு தீண்டிய நிலையில், சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னையில் உள்ள மாதவரம், கண்ணபிரான் கோவில் தெருவில் வசித்து வருபவர் சுதாகர். இவர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரின் மகள் டார்லியா (வயது 6). சிறுமி அங்குள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். 

இந்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டின் முன்பகுதியில் சிறுமி விளையாடிக்கொண்டு இருந்த நிலையில், அங்கு வந்த பாம்பு சிறுமியை தீண்டியுள்ளது. இதனால் சிறுமி அலறவே, சத்தம் கேட்டு வந்த பெற்றோர் விஷயத்தை கேட்டறிந்துள்ளனர். 

பின்னர், மகளை மீட்டு சிகிச்சைக்காக  அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்யவே, அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால், சிறுமி மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சிறுமியின் இறப்பை அரசு ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்களும் உறுதி செய்தனர். இந்த விஷயம் தொடர்பாக மாதவரம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement