தமிழகம்

ரூ.4.15 கோடி மோசடி வழக்கில், தலைமறைவாக இருந்த பெண் கைது - சென்னை காவல்துறை அதிரடி.!

Summary:

ரூ.4.15 கோடி மோசடி வழக்கில், தலைமறைவாக இருந்த பெண் கைது - சென்னை காவல்துறை அதிரடி.!

மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த பெண்மணி, சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். 

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் சு.மு. கணேசன் (வயது 50). இவர் சென்னையில் சொந்த வீடு வாங்க விரும்பிய நிலையில், இதனை தெரிந்துகொண்ட வெங்கடேசன், அவரின் மனைவி லட்சுமி, சுரேஷ் பாபு, சுரேஷ் பாபுவின் மனைவி காமாட்சி ஆகியோர் கணேசனை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். 

தங்களுக்கு சொந்தமான இரண்டு தளங்கள் கொண்ட வீடு கோடம்பாக்கத்தில் இருப்பதாகவும், இதனை உங்களுக்கு விற்பனை செய்ய சம்மதம் என்று கூறி ரூ.3.15 கோடிக்கு பேசி முடிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் வருடம் மார்ச் 1 ஆம் தேதி முன்தொகையாக ரூ.1.15 கோடி ரொக்கமாகவும், வங்கி வழியாக ரூ.2 கோடியும் கொடுக்கப்பட்டுள்ளது. 

பணத்தை பெற்றுக்கொண்ட மோசடி கும்பல் வீட்டை எழுதி கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளது. மேலும், திண்டிவனத்தில் உள்ள வீட்டை வைத்து TATA Finance மூலமாக ரூ.1 கோடி கடன் பெற்று அவர்களையும் ஏமாற்றியுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட கணேசன் மற்றும் தனியார் கடன் நிறுவனம் 2020 ஆம் வருடம் புகார் அளித்துள்ளனர். 

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கடந்த 2020 மார்ச் 4 ஆம் தேதி வெங்கடேசன், காமாட்சி, சுரேஷ்பாபு ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த லட்சுமியை (வயது 44) அதிகாரிகள் தேடி வந்த நிலையில், அவர் நேற்று (ஜன. 7, 2022) அன்று கைது செய்யப்பட்டார். 


Advertisement