கையிலேயே இருக்கு அருவாள்... பட்டப்பகலில் பேருந்து நிலையத்தில் நடந்த பயங்கரம்! அரசுப் பேருந்து நடத்துநரை ஓட ஓட விரட்டி வெட்டிய கும்பல்.... குலை நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சி..!!!
சென்னை கொடுங்கையூர் பேருந்து நிலையத்தில் தற்காலிக அரசுப் பேருந்து நடத்துநர் நித்திய நாதனை இளைஞர் கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 13-ஆம் தேதி மாலை பயணிகள் முன்னிலையில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. படுகாயமடைந்த நடத்துநர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலமுடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
முன்விரோதம் காரணமாக நடத்துநர் மீது தாக்குதல்
தேவர் ஜெயந்தியின்போது, தற்காலிக நடத்துநர் நித்திய நாதனின் நண்பருக்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இதற்குப் பழிவாங்கும் நோக்கில், கடந்த 13-ஆம் தேதி மாலை கொடுங்கையூர் பேருந்து நிலையத்துக்கு வந்த இளைஞர் கும்பல், அங்கிருந்த நித்திய நாதனை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது.
இதையும் படிங்க: பேருந்து நிலையத்திலே இப்படியா..? மக்கள் கண்முன்னே அரசு நடத்துநரை ஓட ஓட விரட்டி வெட்டிய மர்ம கும்பல்! குலை நடுங்கவைக்கும் சம்பவம்...!!!
பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகள் இதைப் பார்த்து அலறியடித்து ஓடினர். பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் நடந்த இந்தத் தாக்குதல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது வெளியாகியுள்ள சிசிடிவி காட்சிகளிலும் தாக்குதல் தொடர்பான காட்சிகள் பதிவாகியுள்ளன.
ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை
தாக்குதலில் படுகாயமடைந்த நித்திய நாதனை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் நலமுடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருவர் கைது; மற்றவர்களுக்கு போலீசார் வலை
பேருந்து ஓட்டுநர் அளித்த புகாரின் அடிப்படையில் கொடுங்கையூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். இந்தத் தாக்குதலில் தொடர்புடையதாக நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் இருவரை போலீசார் ஏற்கனவே கைது செய்துள்ளனர்.
தலைமறைவாக உள்ள மற்றவர்களைப் பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். முன்விரோதம் காரணமாக நடத்துநர் குறிவைத்து தாக்கப்பட்டாரா, இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்ற 13ம் தேதி மாலை, கொடுங்கையூர் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து நடத்துனரை இளைஞர்கள் சிலர் வெட்டும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.#Chennai #Kodungaiyur #ChennaiNews #chanakyaa
— சாணக்யா (@ChanakyaaTv) November 15, 2026
Stay informed with the latest news through Chanakyaa via https://t.co/fKuhMnLnfy pic.twitter.com/1tKnly5Sb4
இதையும் படிங்க: ரூ.21 கோடி தனிஷ்க் கொள்ளை...! 4 நாளாக போலீஸ்சிடம் தண்ணி காட்டும் நிஷாந்த்...! காதலியின் வீட்டு கடனை அடைக்க போட்ட மாஸ்டர் பிளான்.!!!