சிறுமி மாயமான வழக்கில் அதிர்ச்சி திருப்பம்.. கடத்தி கற்பழிப்பு.. தப்பி வந்த சிறுமி பரபரப்பு வாக்குமூலம்.!chennai-kasimedu-man-cheated-minor-girl-sexual-abused-a

15 வயது சிறுமி மாயமானதாக கூறப்பட்ட வழக்கில், காதலுக்கு உதவி செய்வதாக நினைத்து ஜோலார்பேட்டைக்கு கடத்தி சென்று கற்பழிக்கப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது. பெண்மணி ஒருவரின் உதவியுடன் கிருஷ்ணகிரியில் இருந்து சிறுமி தப்பி வந்த பரபரப்பு சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

சென்னையில் உள்ள காசிமேடு சிங்கார வேலர் நகரில், 15 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். கடந்த டிச. 28 ஆம் தேதி வெளியே சென்ற சிறுமி வீட்டிற்கு வராத நிலையில், சிறுமியின் பெற்றோர் இராயபுரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை ஏற்ற ராயபுரம் மகளிர் நிலைய காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இந்த நிலையில், சிறுமி வேலூரில் இருப்பதாக செல்போன் மூலமாக பெற்றோருக்கு தகவல் தெரியவரவே, உடனடியாக காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளனர். காவல் துறையினரும் பெற்றோருடன் வேலூருக்கு சென்று சிறுமியை மீட்ட நிலையில், இராயபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையில், சிறுமியின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த தொழிலாளி வெங்கடேசன் என்பவர், சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தது உறுதியானது. இதனால் வெங்கடேசனை கைது செய்த அதிகாரிகள், அவனிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் பல பகீர் தகவல்கள் தெரியவந்துள்ளது. 

chennai

சிறுமி காசிமேடு பகுதியை சார்ந்த வாலிபருடன் காதல் வயப்பட்டு இருந்த நிலையில், சிறுமியின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த வெங்கடேசன் அவரின் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். ஒருகட்டத்தில் சிறுமியின் காதல் விஷயம் வெங்கடேசனுக்கு தெரியவந்து, அவர் காதலுக்கு நான் உதவி செய்கிறேன் என்று கூறி ஏமாற்றியுள்ளார்.

சிறுமியும் அதனை நம்பி வெங்கடேசனுடன் பழகி வந்த நிலையில், சிறுமியை அடைய நினைத்த வெங்கடேசன் சம்பவத்தன்று அவரின் வீட்டிற்கு சென்று அன்பாக பேசியுள்ளார். அப்போது, காதல் ஜோடி தனிமையில் சந்தித்து பேச ஜோலார்பேட்டையில் உள்ள நண்பரின் வீட்டிற்கு அழைத்து சென்று வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பதாக கூறியுள்ளார். 

சிறுமியும் கடந்த 28 ஆம் தேதி காதலனை சந்திக்க வெங்கடேசனுடன் புறப்பட்டு ஜோலார்பேட்டைக்கு சென்றுள்ளார். சிறுமியின் காதலனுக்கு வெங்கடேசன் தகவல் தெரிவிக்காத நிலையில், தனிமையில் இருந்த சிறுமியை மிரட்டி வெங்கடேசன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்திடுவதாகவும் மிரட்டி இருக்கிறார். 

chennai

இதனால் பயந்துபோன சிறுமி விஷயத்தை வெளியே கூறாமல் இருந்து வந்த நிலையில், கிருஷ்ணகிரியில் இருக்கும் மற்றொரு நண்பரின் வீட்டிற்கு சிறுமியை அழைத்து சென்ற வெங்கடேசன், சிறுமியை அங்கேயே விட்டுவிட்டு வந்துள்ளார். வெங்கடேசனின் நண்பரின் மனைவி சிறுமியிடம் விசாரித்ததில் உண்மை தெரியவந்துள்ளது. 

இதனால் அதிர்ச்சியடைந்த பெண்மணி சிறுமியை தனது சொந்த ஊரான வேலூருக்கு அனுப்பி வைத்து, பெற்றோருக்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தியுள்ளார். அங்கிருந்து வேலூர் வந்த சிறுமி, தனது இருப்பிடம் குறித்து பெற்றோருக்கு தெரிவித்துள்ளார். சிறுமி மாயமான தகவல் அறிந்த வெங்கடேசன், அவரது வீட்டில் நல்லவன் போல நடித்து, பெற்றோர்களுடன் உடன் சேர்ந்து தேடி நாடகமாடி இருக்கிறார். 

கைதாகிய வெங்கடேசனுக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளதும், வெங்கடேசனின் மனைவி தற்போது 4 ஆவது மாத கர்ப்பமாக உள்ளதும் தெரியவந்துள்ளது. இவரின் மீது போக்ஸோ சட்டம் உட்பட 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.