தமிழகம்

அடுத்த 3 மணிநேரத்திற்கு எங்கெங்கு மழை பெய்யும்?.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!!

Summary:

வரும் 3 மணிநேரத்திற்கு ஈரோடு, நாமக்கல், கரூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வரும் 3 மணிநேரத்திற்கு ஈரோடு, நாமக்கல், கரூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று காலை வெளியிட்ட செய்தி குறிப்பில், "குமரி கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கன மழையும் பெய்யலாம். 

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, தென்காசி, தேனி, திண்டுக்கல், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும் பெய்யலாம்" என்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில், வரும் 3 மணிநேரத்திற்கு ஈரோடு, நாமக்கல், கரூர், சேலம், திருச்சிராப்பள்ளி, இராமநாதபுரம், சிவகங்கை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், வேலூர், இராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் மாலை 7 மணிக்கு வெளியிட்ட தகவலில் தெரிவித்துள்ளது. 


Advertisement