BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
முருகன் கோவிலில் சாமியார் வேடத்தில் கஞ்சா விற்பனை.. ஆபிசர்களை வைத்து ஆப்படித்த வேலவன்.!
சென்னையில் உள்ள மயிலாப்பூர், இராயப்பேட்டை, ஐஸ்ஹவுஸ் பகுதியில் உள்ள கோவில்களில் சாமியார் ஒருவர் பிச்சையெடுப்பது போல நடித்து, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலின் பேரில் ஐஸ்ஹவுஸ் காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையிலான காவல் துறையினர், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இருசப்பன் தெருவில் உள்ள முருகன் கோவிலில் அமர்ந்து பிச்சையெடுத்த சாமியார், சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்துள்ளார்.

அவரிடம் அதிகாரிகள் நேரடியாக விசாரிக்காமல், கஞ்சா வாங்குவது போல நபரொருவரை அனுப்பி வேதனை செய்தனர். அதன்போது, கஞ்சா விற்பனை செய்வது உறுதியாகவே, காவல் துறையினர் சாமியாரை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில், அவர் இராயப்பேட்டை யானைக்குளம் பகுதியை சார்ந்த சேகர் (வயது 50) எனதும், பிச்சையெடுப்பது போல நடித்து, சாமியார் வேடம் பூண்டு கஞ்சா பொட்டலத்தை விற்பனை செய்ததும் அம்பலமானது. இவரின் வாக்குமூலத்தின் பேரில் கஞ்சா சப்ளை செய்த தேனியை சார்ந்த ராஜா (வயது 55), ஆசைத்தம்பி (வயது 41) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.