லாரி மோதி, நடுவில் சிக்கி கோர விபத்து.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் துடிதுடிக்க பலி.. தமிழகமே சோகம்.!



chennai-highway-car-accident-in-karur-family

தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

கரூர் மாவட்டத்தில் நிதி நிறுவனம் நடத்தி வருபவர் முனியப்பன். இவர் தனது குடும்பத்தாருடன் சொந்த ஊரான சீர்காழி நோக்கி காரில் சென்றுள்ளார். அப்போது கார் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் எறையூர் அருகே சென்று கொண்டிருந்த நிலையில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

இதன் காரணமாக மற்றொரு வாகனத்திற்கு பின்னால் தனது காரை நிறுத்திய நிலையில், அதிவேகமாக வந்த லாரி முனியப்பனின் காரின் பின்னால் வேகமாக மோதியுள்ளது. இதில் இரண்டு வாகனங்களுக்கும் நடுவே அவரது கார் சிக்கி நசுங்கியது.

car

இந்த விபத்தில் காரில் பயணித்த முனியப்பனின் மனைவி கலாராணி மற்றும் மகள் ஹரிணி, தாய் பழனியம்மாள் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், முனியப்பன் மருத்துவமனையில் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

தொடர்ந்து இவரது மகன் ஹரி மட்டும் சிறிய காயங்களுடன் உயிர் தப்பி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விஷயம் தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து 4 பேரின் உடல்களையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.