தமிழகம்

ஓடும் காரில் திடீர் தீ.. 9 பேர் பயணம்.. அடுத்து நடந்தது என்ன தெரியுமா?.. பதறிப்போன குடும்பத்தினர்.!

Summary:

ஓடும் காரில் திடீர் தீ.. 9 பேர் பயணம்.. அடுத்து நடந்தது என்ன தெரியுமா?.. பதறிப்போன குடும்பத்தினர்.!

சென்னையில் உள்ள சூளைமேடு பகுதியை சார்ந்தவர் ரவி (வயது 60). ரவி நேற்று காலை நேரத்தில் சென்னையில் இருந்து குடும்பத்துடன் ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள சத்யவேட்டை அடுத்துள்ள கோவிலுக்கு காரில் புறப்பட்டு சென்றுகொண்டு இருந்தார். இந்த காரில் 2 சிறுவர்கள் உட்பட 9 பேர் இருந்துள்ளனர். 

இவர்களின் கார் கும்மிடிபூண்டியை அடுத்துள்ள பெருவாயால் சென்னை - கல்கத்தா தேசிய நெடுஞ்சாலை பகுதியில் செல்கையில், திடீரென காரின் முன்புறம் இருந்து கரும்புகை எழுந்துள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த ரவி காரை சாலையோரம் நிறுத்திய நிலையில், காரில் இருந்த அனைவரும் வாகனத்தில் இருந்து பதறியபடி இறங்கினர். 

இதன்பின்னர், சில நொடிகளுக்கு உள்ளாகவே கார் தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது. முன்னதாக ரவி பேனட்டை திறந்து பார்க்கையில் தீப்பொறி வருவதை கண்டுள்ளார். அதன்போது, தண்ணீர் ஊற்றியும் தீ கட்டுக்குள் வரவில்லை. மொத்தமாக பற்றிக்கொண்டு எரிந்துள்ளது. சம்பவ பகுதியில் கண்காணிப்பு பணியில் இருந்த கவரைப்பேட்டை காவல் துறையினர், போக்குவரத்தை தடுத்து நிறுத்தினர். 

பின்னர், இதுகுறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த கும்மிடிப்பூண்டி தீயணைப்புத்துறையினர், தீயினை நீரை பீச்சி அடித்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். சேதமடைந்த கார் கிரேன் உதவியுடன் அப்புறப்படுத்தப்ட்ட நிலையில், இதனால் அரைமணிநேரம் சென்னை - கல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு பாதிக்கப்பட்டது. 

காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சார்ந்த 9 பேரும் அதிஷ்டவசமாக உயிர்தப்பினர். இந்த விஷயம் தொடர்பாக கவரைப்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


Advertisement