தமிழகம்

பிரிந்து வாழ்ந்த கணவனை நேரில் சந்திக்க சென்று, உடல் உறுப்புகளை இழந்த இளம்பெண்.. கண்ணீர் சோகம்.!

Summary:

பிரிந்து வாழ்ந்த கணவனை நேரில் சந்திக்க சென்று, உடல் உறுப்புகளை இழந்த இளம்பெண்.. கண்ணீர் சோகம்.!

சென்னையில் உள்ள கிண்டி பகுதியில் வசித்து வருபவர் சர்மிளா. இவர் தனது பெற்றோரின் வீட்டில், 10 & 6 வயதுடைய இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். கணவன் - மனைவி பிரச்சனையில் சர்மிளா தனது கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். சர்மிளாவின் கணவர் திண்டுக்கல்லில் இருக்கிறார். 

இந்நிலையில், குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கணவருடன் சேர்ந்து வாழ முடிவெடுத்த சர்மிளா, சமாதானம் பேச கடந்த 8 ஆம் தேதி இரவில் முத்துநகர் எக்ஸ்பிரஸ் இரயிலில் திண்டுக்கல் பயணம் செய்ய முடிவெடுத்து சென்றுள்ளார். ஷர்மிளாவின் டிக்கெட் வைட்டிங்கில் இருந்த நிலையில், டி.டி.ஆர் பரிசோதனை செய்து, பொதுப்பெட்டிக்கு செல்ல அறிவுறுத்தி இருக்கிறார். 

சர்மிளா அபராத தொகை செலுத்தி இங்கயே பயணம் செய்வதாக கூறியும், இருக்கை இல்லாததால் டி.டி.ஆர் பொதுப்பெட்டிக்கு செல்ல வற்புறுத்தி, ஒருகட்டத்தில் திட்டி இருக்கிறார். இதனால் இரவு உறக்க கலக்கத்திலேயே, மேல்மருவத்தூர் இரயில் நிலையத்தில் பொதுப்பெட்டிக்கு சர்மிளா மாற முயற்சித்து இருக்கிறார். 

அப்போது, எதிர்பாராத விதமாக இரயிலுக்கும் - நடைமேடைக்கும் இடையே சர்மிளா மாட்டிக்கொள்ள, இரயில் புறப்பட்டதால் அவரின் இடது கால் மற்றும் இடது கை துண்டானது. சம்பவ இடத்தில் இருந்த இரயில்வே காவல் துறையினர், அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளனர். 

பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் சர்மிளா அனுமதியாகியுள்ள நிலையில், இதுகுறித்து வீடியோ பதிவு செய்து இருக்கிறார். இந்த விஷயம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. கருத்து வேறுபாட்டினால் பிரிந்த கணவனை மீண்டும் சந்திக்க சென்ற பெண்மணி, விபத்தில் சிக்கி உடல் உறுப்புகளை இழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement