இன்று ஆபரணத்தங்கம் மற்றும் வெள்ளியின் விலை எவ்வளவு தெரியுமா?.! தெரிஞ்சா அள்ளிட்டு போயிடுவீங்க..!chennai gold rate today

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்த தகவலை தற்போது காணலாம்.

சில மாதங்களாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்துவரும் நிலையில்,  சென்னையில் இன்று ஆபரண தங்கம் மற்றும் வெள்ளியின் விலை எவ்வித மாற்றமுமின்றி நேற்றைய விலையிலேயே இருக்கிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4683 என்றும், ஒரு சவரன் விலை ரூ.37,464 என்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

gold

சென்னையில் இன்று 24 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.5082 எனவும், ஒரு சவரன் ரூ.40,656 என்றும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு 10காசுகள் குறைந்து ரூ.65.20 என்றும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.65,200 என்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.