மீண்டும் தங்கத்தின் விலை கிடுகிடு உயர்வு... அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்..!

மீண்டும் தங்கத்தின் விலை கிடுகிடு உயர்வு... அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்..!


chennai gold and silver rate

சென்னையில் ஆபரணத்தங்கம் மற்றும் வெள்ளியின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது இல்லத்தரசிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களாக ஆபரண தங்கம் மற்றும் வெள்ளியின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், இன்று மீண்டும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சென்னையில் உயர்ந்துள்ளது. இன்றைய விலை நிலவரம் குறித்து தற்போது காண்போம். சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.16 உயர்ந்து ரூ.4676க்கு விற்பனையாகி வருகிறது. 

chennai

அதே போல சென்னையில் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.128 உயர்ந்து ரூ.37408 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 24 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.5078 என்றும், ஒரு சவரன் ரூ.40624-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ.60 காசுகள் குறைந்து ரூ.62.30 என்றும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.62,300 எனவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.