தமிழகம் டெக்னாலஜி

நண்பருடன் பயணம்.... மருத்துவக் கல்லூரி மாணவர் பேருந்து சக்கரத்தில் சிக்கி பரிதாப பலி..!

Summary:

நண்பருடன் பயணம்.... மருத்துவக் கல்லூரி மாணவர் பேருந்து சக்கரத்தில் சிக்கி பரிதாப பலி..!

சென்னையிலுள்ள ஜாபர்கான்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் முகமது ரகுமான் (வயது 20). இவர் சென்னை வேலப்பன் சாவடியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் மூன்றாம் வருடம் படித்து வருகிறார். 

இந்நிலையில், இன்று காலை நண்பர் அப்துல்லா என்பவருடன் இருசக்கர வாகனத்தில் புதுப்பேட்டைக்கு சாலையில் சென்று கொண்டிருந்த போது, இவர்களின் பின்னால் இருந்து வந்த மாநகர பேருந்தும் பலமாக மோதியுள்ளது. 

நிலைதடுமாறி பேருந்து சக்கரத்தில் விழுந்தவர்களில் ரகுமானின் இடுப்பு பகுதியில் சக்கரம் ஏறி இறங்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், அப்துல்லா சிறு காயத்துடன் உயிர் தப்பினர். இது தொடர்பாக காவல்துறை விசாரணை நடந்து வருகிறது.


Advertisement