நடுவானில் பெண் பயணியிடம் அத்துமீறல்.. மருத்துவ பேராசிரியர் சில்மிஷம்..! 

நடுவானில் பெண் பயணியிடம் அத்துமீறல்.. மருத்துவ பேராசிரியர் சில்மிஷம்..! 


Chennai From Saudi Travel Medical College Professor Sexual Assaults Woman

சவுதியில் இருந்து சென்னை வந்த பயணி சக பெண் பயணியிடம் அத்துமீறிய நிலையில், பெண் கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டவர் ஜாமினில் விடுதலை ஆனார்.

சென்னையில் உள்ள மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு, சவுதியில் இருந்து விமானத்தில் 239 பயணிகள் சென்னை வருகை தந்தனர். இவர்களில், அமெரிக்காவில் மென்பொறியாளராக பணியாற்றி வரும் சென்னை ஆதம்பாக்கம் நகரை சேர்ந்த 35 வயது பெண்ணும் சவூதி வழியே தாயகம் வந்திருந்தார். 

அப்போது, பெண்ணுக்கு பின் இருக்கையில் அமர்ந்து இருந்த தஞ்சாவூர் மருத்துவ பேராசிரியர் ஸ்ரீராம் (வயது 45), பெண் மென்பொறியாளரிடம் சில்மிஷம் செய்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பெண்மணி விமானம் சென்னை வந்து தரையிறங்கியதும் விமான நிலைய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

chennai

இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால்., ஸ்ரீராமிடம் எச்சரிக்கை செய்து எழுதி வாங்கி அனுப்பி வைத்துள்ளனர். பெண்ணின் மீது ஆத்திரத்தில் இருந்த ஸ்ரீராம் அவரின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். 

இந்த விஷயம் தொடர்பாக பெண்மணி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பேராசிரியர் ஸ்ரீராமை கைது செய்தனர். அதனைத்தொடர்ந்து அவர் ஜாமினில் வெளியே வந்துள்ளார்.