தமிழகம்

28 வயது மனைவி உமாவின் அந்தரங்க புகைப்படத்தை வைத்து கணவன் செய்த காரியம்.! பரபரப்பு சம்பவம்.

Summary:

Chennai dowry issue husband leaked wife private photos

கேட்ட வரதட்சணை கொடுக்காததால் மனைவியின் அந்தரங்க புகைப்படத்தை காண்பித்து மனைவியிடம் கணவன் வரதட்சணைக் கேட்டு கொடுமைப் படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் உமா (28) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இருக்கு கடந்த 2010ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்துள்ளது. ஆனால் திருமணம் முடிந்த வருடங்களில் கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக உமா தனது கணவனைப் பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.

இதனிடையே தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்த உமா அங்கு பணியாற்றி வந்த விஜயபாரதி என்பவருடன் நெருங்கி பழகி வந்துள்ளார். இவர்கள் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியதை அடுத்து இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

மகள் குளிக்கும் போது திடீரென கேட்ட ...

மகளின் இரண்டாவது திருமணத்திற்கு வரதட்சணையாக உமாவின் பெற்றோர் 25 சவரன் நகை மற்றும் சீர்வரிசை பொருட்கள் ஆகியவற்றை வழங்கியுள்ளனர். திருமணம் முடிந்து சில ஆண்டுகள் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த குடும்ப வாழ்க்கையில் திடீரென சிக்கல் ஏற்பட ஆரம்பித்துள்ளது.

அதாவது விஜயபாரதி தனது மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் கணவரின் கொடுமை தாங்க முடியாமல் உமா கணவரிடம் கோபித்து கொண்டு பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். இருப்பினும் உமாவை விடாமல் துரத்திய விஜயபாரதி தொழில் தொடங்க வேண்டும் எனவும் அதற்காக 10 லட்சம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

பணம் கொடுக்கவில்லை என்றால் உனது அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிடுவேன் என விஜயபாரதி மனைவியை மிரட்டியுள்ளார். ஆனாலும் உமா பணம் கொடுக்க மறுத்ததை அடுத்து விஜயபாரதி தனது மனைவியின் புகைப்படங்களை முகநூலில் வெளியிட்டது மட்டுமில்லாமல் அதை தனது மாணவியின் வாட்ஸ்அப் எண்ணிற்கும் பகிர்ந்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உமா இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் விஜயபாரதி மீது வழக்குப்பதிவு செய்து அவரை வரதட்சணை கொடுமை, கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்துள்ளனர்.

தாலி கட்டிய மனைவியின் அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பியதோடு, வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Advertisement