கள்ளக்காதல் விவகாரத்தில் திமுக பிரமுகர் கொலை செய்யப்பட்ட விவகாரம்.. 4 பேர் கைது.!Chennai DMK Worker Murder Case 4 Arrested by Triplicane Police Affair Ends Lost Life

சென்னையில் உள்ள பல்லவன் சாலை, காந்தி நகர் ஏ பிளாக் பகுதியில் வசித்து வருபவர் மதன் (வயது 36). இவர் திமுக தொண்டராக இருந்து வரும் நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்னர் 7 பேர் கொண்ட கும்பலால் குத்தி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் மதன் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த விஷயம் தொடர்பாக திருவெல்லிக்கேணி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், அப்பகுதியை சேர்ந்த வினோத் குமார் (வயது 23) என்பவரின் தாயுடன் மதன் கள்ளத்தொடர்பில் ஈடுபட்டு வந்தது அம்பலமானது. இதனாலேயே வினோத் குமார் மற்றும் அவரின் நண்பர்களால் மதன் கொலை செய்யப்பட்டதும் உறுதியானது. 

dmk

இதனையடுத்து, கொலை வழக்கில் தொடர்புடைய வினோத் குமாரை கைது செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தி அவரின் கூட்டாளிகளான கணபதி (வயது 24), நரேந்திரன் (வயது 21), பெரும்பாக்கத்தை சேர்ந்த உசேன் (வயது 19) ஆகியோரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருகின்றனர்.