தொழிலதிபரிடம் ரூ.1 கோடி பறித்த திமுக பிரதிநிதி.. கொள்ளை நாடக சம்பவத்தில் மக்கள் ஆக்சன் பிளாக்.!

தொழிலதிபரிடம் ரூ.1 கோடி பறித்த திமுக பிரதிநிதி.. கொள்ளை நாடக சம்பவத்தில் மக்கள் ஆக்சன் பிளாக்.!


chennai-dmk-supporter-arrested-by-police-about-forgery

தொழிலதிபரிடம் ரூ.1 கோடி பணம் பறிக்க முயற்சித்த திமுக பிரமுகர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

சென்னையில் உள்ள திரு வி.க நகர் பகுதியை சேர்ந்த திமுக பிரதிநிதி சங்கர். இவர் கருப்பு பணத்தை வெள்ளையாக்க உதவுவதாக கூறி, திருப்பூரை சார்ந்த தொழிலதிபரை சென்னைக்கு அழைத்து வந்துள்ளார். 

அவரும் ரூ.1 கோடி கருப்பு பணத்துடன் சென்னை வந்த நிலையில், இருவரும் மற்றொரு நண்பர் விஜய்குமாருக்காக அண்ணா நகர் அருகே காரில் காத்திருந்துள்ளனர். அப்போது, 10 பேர் கொண்ட கும்பல் குமாரை கத்தி முனையில் மிரட்டி, ரூ.1 கோடி பணத்தை பறிக்க முயற்சித்துள்ளது. 

chennai

குமார் கூச்சலிட்டதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் ஒன்றுசேர்த்து மர்ம கும்பலை விரட்டியடித்துள்ளது. கும்பலுடன் இருந்த சங்கரும் ஓட்டம் பிடித்த நிலையில், பொதுமக்கள் சங்கரை பிடித்து காவல் துறையினர்வசம் ஒப்படைத்தனர். 

விசாரணையில், கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவதாக கூறி, தொழிலதிபரிடம் இருந்து ரூ.1 கோடி பணத்தை பறிக்க முயற்சித்தும் அம்பலமானது. 10 பேர் கும்பலுக்கு திட்டத்தை கூறி தயாராக இருந்த நிலையில், அது தவிர்க்கப்ட்டுள்ளது.