புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
புயலால் வழங்கப்பட்ட விடுமுறையை ஈடு செய்ய நடவடிக்கை: சனிக்கிழமையும் பள்ளி செயல்படும் - அறிவிப்பு.!
கடந்த டிசம்பர் மாதம் சென்னை நகரை மிக்ஜாங் புயலின் மழை மேகங்கள் சூழ்ந்து, 49 ஆண்டுகளில் இல்லாத கடும் மழை பெய்தது.
இதனால் 2 நாட்கள் அரசு சார்பில் பொது விடுமுறை விடப்பட்டது, பள்ளி-கல்லூரிகளுக்கு ஒரு வாரம் வரையிலும் விடுமுறை கிடைத்தது.
இந்நிலையில், தற்போது பள்ளிகள் அனைத்தும் நடைபெற்று வரும் நிலையில், விடுமுறை அறிவித்த நாட்களில் வழங்கப்பட்ட விடுமுறையை ஈடு செய்ய சனிக்கிழமையில் பள்ளிகள் செயல்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும், ஜனவரி 06ம் தேதியான நாளை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட கல்வி அலுவலர் இவ்வுத்தரவை பிறப்பித்து இருக்கிறார்.