வீடு வீடாக இளைஞர் செய்த செயல்., கல்லூரி மாணவர்கள் டார்கெட்.. தனிப்படையின் அசத்தல் சம்பவம்.!

வீடு வீடாக இளைஞர் செய்த செயல்., கல்லூரி மாணவர்கள் டார்கெட்.. தனிப்படையின் அசத்தல் சம்பவம்.!


Chennai Delivery Youngster Ganja Sales

தனியார் உணவு டெலிவரி நிறுவன பெயரில் கஞ்சா விநியோகம் செய்து வந்த சமூக விரோதி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

சென்னையில் உள்ள வேளச்சேரி பகுதியில் வீடு வீடாக சென்று கஞ்சா டோர் டெலிவரி செய்யப்படுவதாக அடையார் துணை ஆணையர் மகேந்திரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து., அவரின் உத்தரவின் பேரில் வேளச்சேரி காவல் ஆணையர் சந்திரமோகன் தலைமையிலான அதிகாரிகள் தனிப்படை குழு விசாரணை நடந்தது. 

விசாரணையில், காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர். அப்போது., தனியார் உணவு டெலிவரி செய்யும் பணியில் இருந்த வேளச்சேரி நேரு நகரை சேர்ந்த ரகுராம் (வயது 23) என்பவர் சந்தேகத்தின் கீழ் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டார். 

chennai

அப்போது., அவர் உணவு டெலிவரி நிறுவன பெயரில் வீடு வீடாக சென்று கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்து வந்தது அம்பலமானது. அதனைத்தொடர்ந்து., அவரின் வாக்குவமூலத்தின் பேரில் தாமோதரன் (வயது 22), பாஸ்கர் (வயது 59) ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.